Breaking News
இந்தியாவுடனான பயணிகள் படகு சேவையை சிறிலங்கா ஆரம்பித்துள்ளது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் ஆகியோரின் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
வசதி விரிவாக்கம் நிறைவடைந்ததையடுத்து, காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவைக்கு வழிவகை செய்யும் வகையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் ஆகியோரின் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
மொத்தம் 100 பயணிகளுடன் பயணித்த எம்வி எம்பிரஸ் என்ற சொகுசு கப்பலை துறைமுகம் வரவேற்றது. கப்பலின் கேப்டன் மற்றும் அதன் பணியாளர்களும் இந்த மைல்கல் நிகழ்வில் இணைந்தனர்.





