உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 15 பிரதிவாதிகளுக்கு கடூழியச் சிறை
அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன் -200 வருட கடூழிய சிறைத்தண்டனை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகளுக்குக் கடுமையாக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்தது.
இதற்கமைய, ஒரு பிரதிவாதிக்கு 260 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக, ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 220 ஆண்டுகள் வீதமும், மேலும் ஐந்து பிரதிவாதிகளுக்கு தலா 200 ஆண்டுகள் வீதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் நான்கு பிரதிவாதிகளுக்கு தலா 240 ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், தீர்ப்பு வழங்கப்பட்ட இன்றைய தினம் முதல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்றும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
அதற்கமைய
1. மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நௌஃபர் அல்லது நௌஃபர் மௌலவி -220 வருட கடூழிய சிறைத்தண்டனை
2. கபூர் மாமா எனும் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை - 240 வருட கடூழிய சிறைத்தண்டனை
3. அபூ சிலா எனும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான் -240 வருட கடூழிய சிறைத்தண்டனை
4. அபூ உமர் எனும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் -240 வருட கடூழிய சிறைத்தண்டனை
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக் -240 வருட கடூழிய சிறைத்தண்டனை
6. அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான் -200 வருட கடூழிய சிறைத்தண்டனை
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன் -
200 வருட கடூழிய சிறைத்தண்டனை
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தௌஸ் - 260 வருட கடூழிய சிறைத்தண்டனை
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மௌலவி-220 வருட கடூழிய சிறைத்தண்டனை
10. ஷாபி மௌலவி எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி -220 வருட கடூழிய சிறைத்தண்டனை
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர் -200 வருட கடூழிய சிறைத்தண்டனை
15. அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன் -200 வருட கடூழிய சிறைத்தண்டனை
16. அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ் -220 வருட கடூழிய சிறைத்தண்டனை
18. ராசிக் ராசா ஹுசைன்-220 வருட கடூழிய சிறைத்தண்டனை
19. கச்சி மொஹம்மது ஜெஸ்மின் -200 வருட கடூழிய சிறைத்தண்டனை





