2029 மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும்: அபிஜீத் டிப்கே கணிப்பு
இளைஞர்களின் குரலை அரசு ஒடுக்குவதாகவும், மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் டிப்கே, 2029 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்படும் என்று கணித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், தேர்தல் நடைமுறையில் சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இளைஞர்களின் குரலை அரசு ஒடுக்குவதாகவும், மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பல்வேறு இளைஞர் மற்றும் கலாசார அமைப்புகள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆளும் கட்சியின் அரசியல் பிளவுபடுத்தும் போக்கு மற்றும் அதிகாரக் கட்டுப்பாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது.





