Breaking News
இம்ரான் கானின் பிடிஐ கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முடிவு, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களுக்கு மேல் இம்ரான் கானின் கட்சிக்கு தகுதியுள்ளதாக அறிவித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சிக்கு அரசு விரோத செயல்கள் காரணமாகத் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முடிவு, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களுக்கு மேல் இம்ரான் கானின் கட்சிக்கு தகுதியுள்ளதாக அறிவித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த உத்தரவு பிடிஐ தேசிய சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வழி வகுக்கிறது.





