இலங்கை பூர்விகத்தைக் கொண்டவர் ஆஸி.செனட்டிற்கு தெரிவு
அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள இத்தெரிவு, அந்நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அடைவாக நோக்கப்படுகின்றது.
இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட கலாநிதி மிச்சேல் ஆனந்தராஜா அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினராக தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள இத்தெரிவு, அந்நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அடைவாக நோக்கப்படுகின்றது.
1970 களின் தொடக்கத்தில் இலங்கையிலிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த மிச்சேல், அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னர் அவரது சிறுபராயத்தில் கணிசமாளனவு காலம் சாம்பியாவில் வாழ்ந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய செனெட் சபைக்கு தெரிவானமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மிச்சேல் ஆனந்தராஜா, தான் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் கதைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அக்கதைகள் பெருமளவான தியாகங்கள் மற்றும் கடின உழைப்பில் இருந்தே உருவானதாகவும் தெரிவித்துள்ளார்.





