கணேமுல்லை சஞ்சீவ படுகொலை விவகாரம்; கம்பஹா ஒஸ்மனனுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்
குறித்த சந்தேகநபர், விசாரணைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து 10-11-2026 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாதாள குழு தலைவர் எனள அறியப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன எனும் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதுக்கு உதவி, ஒத்தாசை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 'கம்பஹா ஒஸ்மன்' என்பவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கீழ், கடந்த 180 நாட்களாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், விசாரணைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து 10-11-2026 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபருக்கெதிரான தடுப்புக் காவல் உத்தரவின் காலம் முடிவடைந்தமையால் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், எனினும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அவரது பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு இதன்போது நீதிவான் உத்தரவிட்டார்.





