ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
வைத்தியர் பி. ஏ. ரத்னபால என்பவரால் இந்த மனு10-11-2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை, காவி உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் பி. ஏ. ரத்னபால என்பவரால் இந்த மனு10-11-2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், ஞானசார தேரருக்கு எதிரான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அவரை பொதுமக்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளிப்படுத்தும் போது சிவிலியன் உடைகளிலோ அல்லது சிறைச்சாலை கைதிகளுக்குரிய உடைகளிலோ கைவிலங்கு இடப்பட்ட நிலையில் காட்சிப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை விதிகளின் 156(2) பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ வரம்புகளை மீறி அவரை புகைப்படம் எடுப்பது, வீடியோப் பதிவுகள் செய்வது, அவற்றை இணையம் மற்றும் ஊடகங்களில் பகிர்வது, விநியோகிப்பது அல்லது அதற்கு அனுமதி வழங்குவது என்பவற்றைத் தடை செய்து உடனடியாக இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.





