முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவரான சுஜீஸ்வர பண்டார தொடர்பான விசாரணைக்காக 10-11-2026 அன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு வருகைத்தந்திருந்தார்.
அங்கு சில மணிநேரம் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி வெளியேறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுஜீஸ்வர பண்டார, ஒரே நேரத்தில் இரு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்று அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுஜீஸ்வர பண்டார தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்படி விசாரணைகளுக்கு அமைவாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அழைப்பானைக்கமைய, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
அங்கு அதிகாரிகளிடம் தனது வாக்குமூலத்தைப் முழுமையாகப் பதிவுசெய்து நிறைவு செய்த பின்னர், அவர் பணியக வளாகத்திலிருந்து வெளியேறியிருந்தார்.





