பாலியல் வல்லுறவு, பாலியல் தாக்குதல் வழக்கில் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்டுக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை
போதைக்கு அடிமையான நிலையில் இருந்து மீண்டது மற்றும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பிராண்ட் தன்னை மாற்றிக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
பிரிட்டனைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரும் திரைப்பட நடிகருமான ரஸ்ஸல் பிராண்டுக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்தது, மேலும் மூன்று பெண்களிடம் பாலியல் தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிராண்ட் மறுத்தார். நீதிபதி ஜோயல் பென்னத்தன், அவரை ஒரு பாலியல் வேட்டையாடுபவர் என்று வர்ணித்தார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், இந்தச் சம்பவங்கள் தமக்கு நீடித்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
போதைக்கு அடிமையான நிலையில் இருந்து மீண்டது மற்றும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பிராண்ட் தன்னை மாற்றிக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கிடையே, சிறுமி ஒருவர் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கு உள்பட, மேலும் இரண்டு பாலியல் வல்லுறவு புகார்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்ற சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.





