புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை
ந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரான எம். கே. பி. திஸாநாயக்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் 25-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிவான் அஸங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தெஹெமி நிவஹனை - அபேகம ரெககமு’எனும் கருப்பொருளின் கீழ் புத்தகமொன்றை அச்சிடும் நடவடிக்கைகளின் போது, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனது நெருங்கிய நபர் ஒருவருக்கு அப்புத்தகங்களை அச்சிடுவதுக்கான பணியை வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மேற்படி சந்தேகநபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





