இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 7.86 பில்லியன் டொலர்கள்
அக்டோபர் மாதத்தில் தொழிலாளர் பணவலுப்பல்கள் 735.6 மில்லியன் டொலர்களாக உயர்ந்ததுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 168,625 ஆக எட்டியுள்ளது.
ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 7.86 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பில், நேர்மறையான பொருளாதார வளர்ச்சி வேகத்திற்குச் பலம் சேர்க்கும் வகையில், மத்திய வங்கியானது அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையிலிருந்து சராசரியாக 191 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. இது, அந்த மாதத்தில் வங்கியானது விற்பனை செய்ததை விடவும் அதிகமான வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்துள்ளதைக் குறிக்கிறது.
அக்டோபர் மாதத்தில் தொழிலாளர் பணவலுப்பல்கள் 735.6 மில்லியன் டொலர்களாக உயர்ந்ததுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 168,625 ஆக எட்டியுள்ளது. இது பொருளாதாரத்திற்கு நிலையான வெளிநாட்டுச் செலாவணி வரவை வழங்கியுள்ளது.
செப்டெம்பர் மாத இறுதியில் 6.867 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில், அக்டோபர் இறுதியில் நாட்டின் கையிருப்புச் சொத்து 7.086 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





