கணிம மணல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்கவுக்கு பிணை
சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை கணிம மணல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் 25-09-2026 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த வழக்கு கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த நீதிவான் சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார்.
அத்துடன், வழக்குடன்தொடர்புடைய ஏனைய சாட்சிகளுக்கு அழுத்தம் பிரயோகிப்பதில் இருந்த விலகியிருக்குமாறும் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்திருந்தார். இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





