ரில்வின் குழுவினர் அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பர்
இதனைவிடவும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட அமைச்சரவைக்குழுவினரையும் இக்குழுவினா சந்தித்து உரையாடவுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவொன்று நேற்று புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ள நிலையில் அக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் புதுடில்லியில் தங்கியுள்ள இக்குழுவினர் மேற்படி சந்திப்புக்கு மேலதிகமாக பா.ஜ.கவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன், பா.ஜ.க. தலைமையகத்தில் பல்வேறு பா.ஜ.கவின் அணியினரையும் தலைவர்களையும் சந்திப்பதுடன், இந்திய பாராளுமன்றம் மற்றும் பா.ஜ.கவின் டெல்லி மாநில அலுவலகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
இதனைவிடவும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்ட அமைச்சரவைக்குழுவினரையும் இக்குழுவினா சந்தித்து உரையாடவுள்ளனர்.
டில்லிக்கு விஜயம் செய்துள்ள ரில்லின் சில்வா தலைமையிலான குழுவில் ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் சந்திரிகா அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் அதம்பாவ, யாழ்.மாவட்டக் குழு உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் சர்வதேசத் துறை உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பாஜகவின் வெளியுறவுத் துறைப் பொறுப்பாளர் விஜய் சௌதைவாலேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். ரில்வின் தலைமையிலான குழுவின் டில்லிப் பயணத்தின் நோக்கம், பாஜக-ஜேவிபி இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதும், அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பதுமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





