வரவு - செலவுத் திட்டம் வெறும் மாயாஜாலம் - சஜித் பிரேமதாச
மக்களின் பிரச்சினைகள் பற்றி பக்கம் பக்கமாக பேசும் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் தீர்வை முன்வைக்கவில்லை.ஏழ்மை மற்றும் தொழிலின்மைக்கு எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் வெறும் மாயாஜாலம் மாத்திரமே என எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதியால் 12-11-2026 அன்று முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நீண்ட உரையாற்றினார்.பல முன்மொழிவுகளை குறிப்பிட்டார்.இவை இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் முன்மொழியப்பட்டன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல நிறைவேற்றப்படவில்லை. இந்த வரவு செலவுத் திட்டமும் அவ்வாறானதே. காலத்தையும், ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்றே இதனை குறிப்பிட வேண்டும்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை.இவ்வாறான நிலையில் இதனை மக்கள் நேய வரவு செலவுத் திட்டம் என்று இதனை எவ்வாறு குறிப்பிட முடியும்.
மக்களின் பிரச்சினைகள் பற்றி பக்கம் பக்கமாக பேசும் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் தீர்வை முன்வைக்கவில்லை.ஏழ்மை மற்றும் தொழிலின்மைக்கு எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் வெறும் மாயாஜாலம் மாத்திரமே என்றே குறிப்பிட வேண்டும். இந்த வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கு என்ன கிடைத்துள்ளது என்பதை மக்கள் ஆராய வேண்டும் என்றார்.





