அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவது வரவு,செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு
அவர் தனது உரையை 5 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நிகழ்த்தினார்.
இலங்கையின் 81ஆவது வரவு செலவு திட்டமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பிற்பகல் 1.40 மணி்யளவில் வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்து 6.30 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவந்தார்.
பாராளுமன்றம் 12-11-2026 அன்று 2027ஆம் வருடத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது. பிற்பகல் 1.25 மணிக்கு அழைப்பு மணி ஒலிக்கப்பட்டு, 1.30 மணிக்கு சபாநாயகர் செங்கோலுடன் படைக்கல சேவிதரால் அக்கிராசனத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
ஆரம்ப நடவடிக்கைகளைத்தொடர்ந்து அடுத்தவருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமாரம திசாநாயக்கவுக்கு சபாநாயகர் அழைத்தார். அதன் பின்னரே ஜனாதிபதி சபைக்குள் வந்து, வரவு செலவு திட்டத்தை வாசிப்பதற்கு ஆரம்பித்தார்.
வரவு செலவு திட்ட உரை ஆரம்பிப்பதற்கு முன்பே பார்வையாளர்கள் கலரி வெளிநாட்டுதூதுவர்கள், விசேட பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், முற்படைகளின் தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர்.
என்றாலும் இந்தமுறை வரவு செலவு திட்ட உரையை செவிசாய்ப்பதற்கு பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டிக்கவில்லை.
ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, புதிய வேலைத்திடடங்கள், நிவாரணங்கள் உள்ளிட்ட நல்ல திட்டங்களை குறிப்பிடும்போதும் ஆளும் கட்சியினர் மேசையில் தட்டி வரவேற்றனர். என்றாலும் எதிர்கட்சியினர் அமைதியாக உரையை செவிசாய்த்துக்கொண்டிருந்தனர். என்றாலும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி சில நிவாரணதிட்டங்களை முன்வைக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பனர்கள் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியான முறையில் சிரித்துக்கொண்டிருந்தனர்.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுதிட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரைகுமார திசாநாயகடக பிற்பகல் 1.40 மணிக்கு சமர்ப்பித்து வாசிக்க ஆரம்பித்து பிற்பகல் 6.30மணிக்கு முடித்துக்கொண்டார்.
தனது வரவு செலவுத்திட்ட உரையை நண்பகல் 1.40 மணிக்கு ஆர்மபித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலை 6.30 மணிவரை இடைவிடாது நிகழ்த்தியே இலங்கையில் வரவு செலவுத்திட்ட உரை நேர வரலாற்றில் இரண்டாவது அதிக நேர உரை என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் வரவு செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்திய சாதனை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலையே சாரும்.1977 ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த தனது முதலாவது வரவு செலவுத் திட்ட உரையை 5 அரை மணித்தியாலங்கள் நிகழ்த்தியதே இலங்கையின் மிக நீண்ட வரவு செலவுத் திட்ட உரையாகப் பதிவாகியுள்ளது.அவர் தனது உரையை 5 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நிகழ்த்தினார்.
அவருக்கு அடுத்ததாக நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 30 நிமிடங்களும் நிகழ்த்தி இரண்டாவது அதிக நேர வரவு செலவுத்திட்ட உரை என்ற சாதனையப் படைத்த நிலையில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 20 நிமிடங்களும் ஆற்றியிருந்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து தனது வரவு செலவித்திட்ட உரையை 4மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தி ரவிகருணாநாயக்கவின் சாதனையை முறியடித்து இரண்டாவது சாதனையாளராக தன்னை பதிவு செய்து கொண்டார்.
நிறைவாக வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு உதவிய அனைவருக்கும் ஜனாதபதி நன்றி செலுத்தி முடித்துக்கொண்டார். இறுதியாக சபாநாயகர் சபையை வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக இன்று காலை 9.30மணிவரை ஒத்திவைத்தார்.





