எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது செய்யப்படுவார்: பொலிஸ் பேச்சாளர்
போதைப்பொருட்கள் ஒழிப்பிற்கான சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் காலங்களில் கஞ்சிப்பானை இம்ரான் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.எஸ்.பி எப்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் 13-08-2026அன்று நடைபெற்ற விசேட ஊடகவிலாளர் சந்திப்பின்போது கஞ்சிப்பானை இம்ரான் கைதுச்செய்யப்படுவாரா என எழுப்பப்பட்ட ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கைகள் தொடருகின்றன.
போதைப்பொருள் பறிமுதல் மற்றும் முக்கிய போதைப்பொருள் வலைப்பின்னல்களை இலக்குவைத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
எதிர்வரும் காலங்களில் கஞ்சிப்பானை இம்ரான் நிச்சயம் கைது செய்யப்படுவார். போதைப்பொருட்கள் ஒழிப்பிற்கான சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் குற்றவாளிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தையும் பாவனையையும் முழுமையாக ஒழிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். தகவல் வழங்குபவர்களின் விவரங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றார்





