குடிவரவு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்
174 ஆம்வாசகத்திலிருந்து 'எழுத்திலான' என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவுசெய்துள்ளது.
குடிவரவு சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையை பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் 12-11-2026 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்காக கூடியநிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே மேற்கண்டவாறு அறிவித்தார்.
அவர் மேலும் அறிவித்ததாவது, அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்சவாலுக்குட்படுத்தப்பட்ட 'குடிவரவு' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதைபாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
தற்போதைய வடிவிலுள்ள சட்டமூலத்தின் வாசகம் 43(3) அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ஐ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளவாறான நிபந்தனைகளின் அடிப்படையில் 43(3)ஆம் வாசகத்திற்குப் பதிலாகப் புதிய வாசகமொன்றை இடுவதன் மூலமும்,புதிய 43(4) ஆம் வாசகமொன்றை உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடு நீங்கும்.
தற்போதைய வடிவிலுள்ள 169 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 76 ஆம்உறுப்புரையையும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அரசியலமைப்பின்12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றது. உயர் நீதிமன்றத்தின்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் 169(1) மற்றும் 169(3) ஆம் வாசகங்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மேற்படிமுரண்பாடு நீங்கும்.
தற்போதைய வடிவிலுள்ள 45 மற்றும் 65 ஆம் வாசகங்கள், அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 45(1) ஆம் வாசகத்தைத் திருத்துவதன் மூலமும், குடிவரவு வசதிகளுக்கான செலவுகள்தொடர்பான முன்மொழியப்பட்ட ஏற்பாட்டை உரிய இலக்கமிடலுடன்உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடுகள் நீங்கும்.
பரிசீலிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புடன்வேறு எத்தகைய முரண்பாடும் இல்லை. எனினும், 174 ஆம்வாசகத்திலிருந்து 'எழுத்திலான' என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவுசெய்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொடர்புடையஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை தேவைப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





