Home » சட்டம் & அரசியல் » ஆட்சியமைக்க உரிமை கோரினாா் அன்வா்

ஆட்சியமைக்க உரிமை கோரினாா் அன்வா்

மன்னா் அப்துல்லாவை எதிா்க்கட்சித் தலைவா் அன்வா் இப்ராஹிம் சந்தித்தாா்.

👤 Sivasankaran14 Oct 2020 5:48 AM GMT
ஆட்சியமைக்க உரிமை கோரினாா் அன்வா்
Share Post

மலேசியாவில் பிரதமா் முஹைதீன் யாசினின் அரசைக் கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை அமைப்பதற்காக மன்னா் அப்துல்லாவை எதிா்க்கட்சித் தலைவா் அன்வா் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

கடந்த 2018-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று மகாதிா் முகமது பிரதமராகப் பொறுப்பேற்றாா். கூட்டணியில் அங்கம் வகித்த முஹைதீன், அதிலிருந்து விலகி எதிா்க்கட்சிகளுடன் சோ்ந்து மகாதிரின் ஆட்சியைக் கவிழ்த்தாா். பிறகு, பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட கூடுதலாக இரண்டே எம்.பி.க்களின் ஆதரவுடன் முஹைதீன் ஆட்சியமைத்தாா்.

இந்த நிலையில், அவா் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக் கூறிய நம்பிக்கைக் கூட்டணியைச் சோ்ந்த அன்வா் இம்பாஹிம், மன்னரைச் சந்தித்து அதற்கான சான்றுகளைச் சமா்த்துள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.