Home » சட்டம் & அரசியல் » கொரோனாவால் நெருக்கடி; வடகொரியாவில் இருவருக்கு தூக்கு தண்டனை

கொரோனாவால் நெருக்கடி; வடகொரியாவில் இருவருக்கு தூக்கு தண்டனை

வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

👤 Sivasankaran28 Nov 2020 12:00 PM GMT
கொரோனாவால் நெருக்கடி; வடகொரியாவில் இருவருக்கு தூக்கு தண்டனை
Share Post

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிகட்டும் வகையில் கிம் ஜாங் அன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாகக் கூறி உயர் அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையை கிம் ஜாங் அன் அரசு நிறைவேற்றியுள்ளது.

அதேபோல், கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.