Home » உலகச் செய்திகள் » பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

👤 Sivasankaran23 Jan 2019 5:30 PM GMT
பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு
Share Post

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) 11 மணிவரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்படுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

வாகனச் சாரதிகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றிரவு பனிப்பொழிவினால் வெப்பநிலை சடுதியாக குறைந்து காணப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக ஸ்கொட்லாந்து வீதிகளில் நேற்று 125 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், மேலதிக அவதானத்துடன் சாரதிகளை செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.