பலூச் விடுதலை இராணுவத்தின் புதிய தலைவராக பாகிஸ்தான் இராணுவ முன்னாள் அதிகாரி ரஹ்மான் குல் நியமனம்
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்திற்கு (Tehrik-e-Taliban Pakistan) எதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான கேப்டன் ரஹ்மான் குல்லை, பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army) தனது புதிய தலைமைத் தளபதியாக நியமித்துள்ளது. உஸ்தாத் முரீத் என்ற பெயராலும் அவர் அறியப்படுகிறார்.
ரஹ்மான் குல், பாகிஸ்தான் இராணுவத்தின் ஃபிரான்டியர் ஃபோர்ஸ் படைப்பிரிவில் பணியாற்றியவர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் கோட்லி பகுதியில், இந்தியா - பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதியில் அவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்திற்கு (Tehrik-e-Taliban Pakistan) எதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். பின்னர், 2010 ஆம் ஆண்டில் இராணுவப் பணியிலிருந்து விலகினார். அவரது சகோதரர் ஷஹாப் கான் பலூச் தற்போது பாகிஸ்தான் இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.





