புதுடில்லி செல்கிறார் அமைச்சர் நளிந்த
மனித ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இம்முறை கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தின கொண்டாட்டத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
உலக சுகாதார தினம் இம்மாதம் 7 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. "சுகாதாரத்திற்காக இணைவோம்; அறிவியலுடன் எழுவோம்" எனும் கருப்பொருளின் கீழ் உலக சுகாதார அமைப்பு இம்முறை உலக சுகாதார தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
மனித ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இம்முறை கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
மனிதர்களின் ஆரோக்கியம் மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சூழலமைப்பின் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் " சுகாதாரம் ஒன்றே" எனும் அணுகுமுறை குறித்து உலகளாவிய அவதானத்தை ஈர்ப்பதே இதன் இலக்காகும்.
தென்கிழக்காசிய பிராந்தியத்திலுள்ள சுமார் 2 பில்லியன் மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான கொள்கைகளை வகுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குதல் ஆகியவற்றை இந்த அலுவலகம் நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





