மினாப் தாக்குதல்: அமெரிக்க அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல்
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்ற யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் அண்மையில் தனது பணியை முடித்துத் திரும்பியுள்ளது.
ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது டோமாஹாக் ஏவுகணைத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கக் கடற்படையின் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. கமாண்டர் லீ ஆர். டேட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ஜெஃப்ரி இ. யார்க் ஆகிய இருவரே அந்த அதிகாரிகள். இந்தத் தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் சமூக ஊடகங்களில் இந்த அதிகாரிகள் தொடர்பாக எச்சரிக்கைச் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்ற யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் அண்மையில் தனது பணியை முடித்துத் திரும்பியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகளை இலக்கு வைத்துத் தாக்கும் முயற்சிகளில் ஈரான் ஈடுபடக் கூடாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.





