Home » உலகச் செய்திகள் » பிரேஸில் அணை உடைப்பு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40

பிரேஸில் அணை உடைப்பு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40

தென்கிழக்கு பிரேஸிலில் அணை உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

👤 Sivasankaran27 Jan 2019 5:31 PM GMT
பிரேஸில் அணை உடைப்பு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40
Share Post

தென்கிழக்கு பிரேஸிலில் அணை உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 300 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. எனினும் காணாமற்போனவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகக் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

மீட்புப் பணிகளில் உதவி செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில் அதிபர் ஜைர் மோல்சோனாரோ ஹெலிகாப்டர் மூலம் சென்று விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டார்.

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், ரஷியா பிரதமர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.