அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளைத்தளபதி இலங்கை விஜயம்
உலகளாவிய கடல் வழித்தடங்களின் முக்கிய சந்தியில் அமைந்துள்ள இலங்கை கொண்டுள்ள வகிபாகத்திற்கு அமெரிக்கா வழங்கும் மூலோபாய முக்கியத்துவத்தினை அட்மிரல் கேலர் இலங்கைக்கு மேற்கொள்ளும்.
உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் வெப் கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் வெப் கேலரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர் 19-02-2026 அன்று முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட விழுமியங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் ஒத்துழைப்பு மற்றும் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் அரச மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
முக்கியமான கடல் வழித்தடங்களைப் பாதுகாத்து, இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள பங்காளர்களை இணைக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய கப்பற்படைக் கட்டளைப்பிரிவான அமெரிக்க பசிபிக் கப்பற்படைப் பிரிவானது உலகின் அரைப் பகுதியில் இயங்குகிறது.
உலகளாவிய கடல் வழித்தடங்களின் முக்கிய சந்தியில் அமைந்துள்ள இலங்கை கொண்டுள்ள வகிபாகத்திற்கு அமெரிக்கா வழங்கும் மூலோபாய முக்கியத்துவத்தினை அட்மிரல் கேலர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த இரண்டாவது விஜயம் எடுத்துக்காட்டுவதுடன், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட, நீண்டகால உறுதிப்பாட்டினையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கடல்சார் கள விழிப்புணர்வு முதல் நாடுகடந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பது வரையான பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் இலங்கையுடன் துணை நிற்கையில், இறையாண்மையினைப் பாதுகாத்து சுதந்திரமான மற்றும் திறந்த ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துகின்ற வெளிப்படையான, நீண்டகால, பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய பாதுகாப்பு பங்காண்மைகளைக் கட்டியெழுப்புவதில் எமது உதவிகள் கவனம் செலுத்துவதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.





