வேலைநிறுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஆதரவில்லை
எமது சங்கத்தில் சுமார் 2,300 மருத்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் வழக்கம் போல் தங்களது கடமைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர், நிபுணத்துவ வைத்தியர் ஆர். ஞானசேகரம் கூறுகையில், நிபுணத்துவ மருத்துவர்கள் தங்களது கடமைகளை வழக்கம் போல் தொடர்வார்கள்.
இதன் மூலம் மருத்துவமனைகளில் தடையற்ற சிறப்பு மருத்துவச் சேவைகள் உறுதி செய்யப்படும். மேலும், முதுகலை பயிற்சி பெறும் நிபுணத்துவ மருத்துவர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை.
எமது சங்கத்தில் சுமார் 2,300 மருத்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் வழக்கம் போல் தங்களது கடமைகளைத் தொடர்ந்து வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடாததே தமது சங்கத்தின் கொள்கையாகும்.
நிபுணத்துவ மருத்துவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், நோயாளிகளின் உயிரைப் பந்தயத்தில் வைக்கும் வகையிலான வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவது எங்களது கொள்கை அல்ல என்றார்.





