வெனிசுலாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குகிறது அமெரிக்கா
பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட வெனிசுலா, தற்போது அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டாளியாக மாறியுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே புதிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட வெனிசுலா, தற்போது அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டாளியாக மாறியுள்ளது. இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது சார்ந்த பயங்கரவாதச் செயல்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் வெனிசுலா ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களிலும் எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே, நாடு கடந்து வெளியேறியிருந்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இதனால், அந்நாட்டில் ஜனநாயக நடைமுறைகள் மீண்டும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.





