கேரளத்தில் உள்ள ஜடாயு பூமி மையத்துக்கு பிரதமர் செல்ல திட்டம்
இந்த முன்மொழிவு பிரதமரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாலிவுட் திரைப்படமான 'ராமாயண்' வெளியானதைத் தொடர்ந்து, பிரம்மாண்டமான ஜடாயு சிற்பத்தால் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள கேரள மாநிலத்தின் ஜடாயு பூமி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல வாய்ப்புள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி இதுகுறித்துப் பேசுகையில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதலில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜடாயு பூமி மையத்துக்குச் செல்வார் என்றும், அதைத் தொடர்ந்து பிரதமர் அங்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜடாயு பூமி மையத்தை உருவாக்கிய ராஜீவ் ஆஞ்சலை, இரண்டு நாள்களுக்கு முன்பு ஷெகாவத் சந்தித்ததாகவும், டெல்லி பியன்னாலே கலைக் கண்காட்சியில் ஜடாயு சிற்பத்தை இடம்பெறச் செய்வதில் அவர் ஆர்வம் தெரிவித்ததாகவும் கோபி கூறினார். இந்த முன்மொழிவு பிரதமரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"கஜேந்திர சிங் ஷெகாவத் ஜடாயுபாறைக்குச் செல்லவிருப்பதாக நான் அறிகிறேன். டெல்லி பியன்னாலே கலைக் கண்காட்சியில் ஜடாயுவின் சிற்பத்தை இடம்பெறச் செய்ய அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பிரதமரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது" என்று கோபி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.





