பதவி விலகியது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகாது: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்
விசாரணையில் தொடர்ந்து பங்கேற்க மறுத்ததுடன், நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரியுள்ளார்.
தனது இல்லத்தில் எரிந்த நிலையில் பணத்தாள்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து தான் விலகியது, குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் பொருள்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. பதவி விலகிய பிறகு, தமக்கு எதிரான நீக்க நடவடிக்கைகளைத் தொடர அரசமைப்புச் சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
விசாரணையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், விசாரணை நடைமுறையின் நியாயத்தன்மையை வர்மா கேள்விக்குள்ளாக்கியுள்ளார். மேலும், விசாரணையில் தொடர்ந்து பங்கேற்க மறுத்ததுடன், நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரியுள்ளார்.
2025 மார்ச் மாதத்தில் அவரது இல்லத்தில் எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய விசாரணையும் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், அவர் தனது பதவியை விலகியிருந்தார்.





