Breaking News
சிங்கப்பூர் சென்றார் முன்னாள் ஜனாதிபதி ரணில்
ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதமும் இவ்வாறு மருத்துவ தேவைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்குப் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ தேவைகளுக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்தது.
ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதமும் இவ்வாறு மருத்துவ தேவைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். ஏப்ரல் 9ஆம் திகதி வரை அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாகவே சிகிச்சைகளுக்காக அவர் மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளார். எனினும் வெள்ளிக்கிழமையன்று அவர் நாடு திரும்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





