கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ விரிவாக்க ஒப்பந்தத்துக்கு டென்மார்க் ஒப்புதல்
ந்த ஒப்புதலின் மூலம், கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.
பல மாதங்களாக நீடித்த மிரட்டல்கள், தூதரக ரீதியிலான உரசல்கள் மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு இடையே இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட விரிசல் ஆகியவற்றைத் தொடர்ந்து, கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க்கும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை மூலம் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்க்டிக் பிராந்தியத் தீவான கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை விரிவுபடுத்த அனுமதிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு டென்மார்க் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அதேவேளையில், கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் இறையாண்மையும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம், கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. இதில், முன்மொழியப்பட்டுள்ள 'கோல்டன் டோம்' ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஏற்பாடுகளும், கூடுதலாக இரண்டு அமெரிக்க ராணுவத் தளங்களை அமைப்பதற்கான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
எனினும், கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் இறையாண்மை தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதுடன், தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமை கிரீன்லாந்து மக்களுக்கு உண்டு என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





