Home » உலகச் செய்திகள் » ஹமில்டனுக்கு உறைபனி எச்சரிக்கை

ஹமில்டனுக்கு உறைபனி எச்சரிக்கை

கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், அங்கு உறைபனி ஏற்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

👤 Sivasankaran23 Jan 2019 5:47 PM GMT
ஹமில்டனுக்கு உறைபனி எச்சரிக்கை
Share Post

கனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், அங்கு உறைபனி ஏற்படும் என்று கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு ஹமில்டன் வாழ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -13 செல்சியசாக குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் -22 செல்சியஸ் குளிர் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.