கனேடிய உயர்ஸ்தானிகர் பிரதமருர் ஹரிணியுடன் சந்திப்பு
உயர்ஸ்தானிகரையும் குழுவினரையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினும் அவரது குழுவினரும், 2026 நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.
உயர்ஸ்தானிகரையும் குழுவினரையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் ஒரு வழிமுறையாக, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கை மற்றும் கனேடியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பங்காண்மையை விருத்தி செய்வதன் ஊடாக, இரு நாடுகளினதும் கல்வித் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். திறன் அபிவிருத்தி, அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்களில் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கல்வி வாய்ப்புகளையும் நிறுவன ரீதியான பங்காண்மைகளையும் மேம்படுத்துவதன் ஊடாக, விஞ்ஞானக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் கனடாவில் வாழும் இலங்கையர் சமூகம் ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்பினை பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய துறைகளில் விசேட கவனம் செலுத்தி, கனேடிய முதலீடுகளை அதிகளவில் நாட்டுக்கு ஈர்ப்பதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.
இச்சந்திப்பில், கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் க்வென் டெம்மல், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.





