ஒற்றையாட்சி ஆட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் - சிறிநேசன் எம்.பி.
தோல்விக்கண்ட ஆட்சி முறையில் அடிப்படைவாதம், ஊழல், மோசடி, இலஞ்சம் என்பனவே தொங்கிக்கொண்டிருக்கின்றன.
ஒற்றையாட்சி என்பது கொழும்பிலே முழு அதிகாரங்களையும் முடக்கி வைத்துக்கொள்ளும் ஒன்றாகவே உள்ளது. எந்த துறை அதிகாரங்களாக இருந்தாலும் கொழும்புக்கே வர வேண்டும். இதனால் காலத்தை விரயமாக்கும் ஆட்சி முறையாகவே இந்த ஒற்றையாட்சி உள்ளது. இந்த ஆட்சி முறை தற்போதைய ஜனாதிபதி காலத்திலாவது மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதுடன், அதிகாரம் பரவலாக்கம் செய்ய வேண்டும். இந்த நாடு மீண்டும் மீளமைக்கப்பட்டு சிறந்த ஆட்சி முறையின் கீழ் நாட்டை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆணைக்குழுக்கள் செலவின தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த கால ஜனாதிபதிகள் இந்த நாட்டில் நல்லதை செய்திருந்தால் நாட்டில் நன்மை மிகுதியாகியிருக்கும். ஆனால் கடந்த காலங்களில் பல விடயங்கள் தவறாக செய்யப்பட்டுள்ளன என்பதனை புரிந்துகொள்ள முடியும்.அந்த வகையில் ஜனாதிபதி ஆட்சி முறையுடன் ஒற்றையாட்சி பொறிமுறையும் இருந்தது.
இவை இரண்டும் இந்த நாட்டில் இருந்தாலும் தேசிய ஐக்கிய ரீதியாக வளர்த்துள்ளதா? அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளதா? மனித உரிமைகள் பேணப்பட்டுள்ளதா? நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதா? அல்லது காணாமல் போன மக்களுக்கு அதிகாரங்கள் கிடைத்துள்ளதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
அந்த வகையில் ஒற்றையாட்சி பொறிமுறை மற்றும் ஜனாதிபதி ஆட்சி முறை என்பன கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு தோல்லியையே தந்துள்ளது. ஒற்றையாட்சி பொறிமுறையை பார்க்கும் போதுஇ இது அடிப்படைவாதத்தை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.வெள்ளைக்காரன் கொடுத்துச் செல்லும் போது எமது நாடு ஆசியாவில் இரண்டாம் நிலையிலும் ஜப்பானுக்கு அடுத்த நிலையிலுமே இருந்தது. ஆனால் இன்று நாங்கள் ஆசியாவில் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதனை சிந்திக்க வேண்டும்.
எனவே நாங்கள் வகுத்துக்கொண்ட அரசியல் யாப்பும்இ நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட ஆட்சி முறைகளும் எமக்கு வெற்றித்தரவில்லை. இதனால் இந்த இடத்தில் இருந்து புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும். அதிகார பரவாராக்கம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அந்தந்த பகுதிகளில் தமது அதிகாரங்களை பயன்படுத்தி அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.
ஒற்றையாட்சி என்பது கொழும்பிலே முழு அதிகாரங்களையும் முடக்கி வைத்துக்கொள்ளும் ஒன்றாகவே உள்ளது. எந்த துறை அதிகாரங்களாக இருந்தாலும் கொழும்புக்கே வர வேண்டும். இதனால் காலத்தை விரயமாக்கும் ஆட்சி முறையாகவே இந்த ஒற்றையாட்சி உள்ளது. ஆகவே தோல்விக்கண்ட ஆட்சி முறையில் அடிப்படைவாதம், ஊழல், மோசடி, இலஞ்சம் என்பனவே தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இதனால் இந்த ஆட்சி முறை தற்போதைய ஜனாதிபதி காலத்திலாவது மாற்றியமைக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதுடன், அதிகாரம் பரவலாக்கம் செய்ய வேண்டும். இந்த நாடு மீண்டும் மீளமைக்கப்பட்டு சிறந்த ஆட்சி முறையின் கீழ் நாட்டை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . சகல மக்களும் ஜனநாயகம், உரிமையுடன் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.





