Breaking News
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்
நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 08-07-2026அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 08-07-2026அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், குச்சவெளி, வெருகல் மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.





