ரஷ்யா - உக்ரைன் போரை ராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர புதின் விருப்பம்: டிரம்ப்
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் இத்தகவலைத் தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் போரைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்புச் சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் இத்தகவலைத் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளின் தலைவர்களுக்கிடையிலான உறவு மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், உக்ரைன் மற்றும் ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மோதல்கள் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்ததாக டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யா - உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை நெருங்கி வரும் நிலையில், புதின் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.





