பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பு தர சோதனையில் இருமுறை தோல்வி
பிஸ்லெரி நிறுவனத்தின் எந்த வகைக் குடிநீர் மாதிரி ஆய்வகப் பரிசோதனையில் பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்டது என்பதை FSSAI தெளிவுபடுத்தவில்லை.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் மாதிரி, ஆய்வகப் பரிசோதனையில் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பிஸ்லெரி நிறுவனத்தின் எந்த வகை குடிநீர் மாதிரி ஆய்வகப் பரிசோதனையில் பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டது என்பதை FSSAI தெளிவுபடுத்தவில்லை.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 2006ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ், பாதுகாப்பற்ற பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொடர்பான விதிமீறல்களுக்காக அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.





