அரசாங்கத்திட ம் உறுதியான வெளிநாட்டுக்கொள்கை இல்லை - ரவூப் ஹக்கீம்
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக தீரமானம் நிறைவேற்றப்படும்போது, அதற்கு ஆதரவாக அரசாங்கம் கைகளை உயர்த்துவதுடன் மாத்திரம் நின்றுவிட முடியாது.
அரசாங்கத்திட ம் உறுதியான வெளிநாட்டுக்கொள்கை ஒன்று இல்லை. அலாவுதீன் விளக்கைப்போன்றே அந்தந்த நாளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் நிலையே இருக்கிறது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகார, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மியன்மாரில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அங்கிருந்து தப்பிவந்த ராேஹிங்யா அகதிகள் கடந்த இரண்டு வருடங்களாக முல்லைத்தீவு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாத இவர்களின், மனித உரிமைகள் பாரியளவில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தற்போது எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பிர் மியன்மார் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலை நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பிரேரிக்கிறேன்.
ஏனெனில் மியன்மாரில் ராேஹிங்யா சமூகத்துக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் இன அழிப்புக்கு ஆளாகிய அந்த தரப்பினருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பளிப்பது, இன அழிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பங்காளிகளான இலங்கை உள்ளிட்ட அனைத்து அரசுகளின் பொறுப்பாகும். அதேபோன்று பலவந்தமாக காணாமலாக்கப்படும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க கூடிய எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையில் இருக்கின்ற எந்த ஒரு நபரையும் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது என குறித்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ராேஹிங்யாக அகதிகளை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப எங்களுக்கு முடியாது. ஆனால் அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை அனுப்புவதற்கே முயற்சித்து வருகிறது.
அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருசில குண்டர்களின் பேச்சைக்கேட்டு, செயற்படாமல் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். அதேநேரம் முல்லைத்தீவு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அந்த அகதிகளை, ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பினர் பார்வையிட அரசாங்கம் அனுமதிக்கும் என நாங்கள் நம்புகிறோம். அகதிகளுக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், அவர்களுக்கான அரச மற்றும் சர்வதேச பாதுகாப்பு கிடைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
இன்று பலஸ்தீனில் இஸ்ரேல் பாரியளவில் இனப்படுகொலை செய்துவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக தீரமானம் நிறைவேற்றப்படும்போது, அதற்கு ஆதரவாக அரசாங்கம் கைகளை உயர்த்துவதுடன் மாத்திரம் நின்றுவிட முடியாது. அவுஸ்திரேலிய ஜனாதிபதி லூலாடிசில்வாக்கு எமது ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததை சிலர் பெருமை பேசியே வந்தார்கள். ஆனால் லூலாடிசில்வா, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் முறைப்பாடு செய்திருக்கிறது. அதுபோன்று அரசாங்கம் இஸ்ரேல் தொடர்பில் முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
மேலும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி தலைவராக இருந்த இம்ரான் கானுக்கு தற்போது ஏற்ப்டுள்ள பாதிப்பு தொடர்பில், எமது அனுதாபத்தை தெரிவிக்கும் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பிபெரேரா கொண்டுவந்தபோது, அதனை அரசாங்கம் நிராகரித்தது. பாகிஸ்தான் எமக்கு மிகவும் நெருங்கமான நற்பு நாடு. எங்களுக்கு அனைத்து சந்தர்ப்பத்திலும் உதவி செய்த நாடு, அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எமது நற்பு நாடாக இருக்கும்போது, அவர்களால் தவறு ஒன்று ஏற்படும்போது, அதனை சுட்டிக்காட்டுவது எமது கடமை. அதனை செய்யுங்கள்.





