Home » சட்டம் & அரசியல் » அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பத்தாண்டுகளில் வருமான வரியே செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பத்தாண்டுகளில் வருமான வரியே செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ்

வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.

👤 Sivasankaran28 Sep 2020 3:01 PM GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பத்தாண்டுகளில் வருமான வரியே செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ்
Share Post

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த பத்தாண்டுகளில் வருமான வரியே செலுத்தவில்லை என நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ் பரபரப்பு செய்தியொன்றை பிரசுரித்துள்ளது.

தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக் காட்டி கடந்த சில ஆண்டுகளில் அவர் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியிருப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டில் அவர் 750 டொலர்கள் மட்டுமே வரி செலுத்தியுள்ளார் என்றும் கடந்த 15 ஆண்டுகளில் பத்தாண்டுகளில் அவர் வரியே செலுத்தவில்லை என்றும் வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், 'டிரம்ப் தனது வணிக சாம்ராஜ்யம் முழுவதும் பெரும் இழப்புகளைப் சந்தித்து வருவதாக கூறி வருமான வரியை குறைத்து காட்டி உள்ளார். 2018ஆம் ஆண்டில் ட்ரம்ப் 47.4 மில்லியன் டொலர்கள் இழப்பைக் கோரியதாகவும் ஆனால் அந்த ஆண்டு நிதி வெளிப்பாட்டில் குறைந்தபட்சம் 434.9 மில்லியன் வருமானம் கிடைத்ததாகக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவறான செய்தி என்று இதற்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளார். பல மில்லியன் டொலர்கள் வரி செலுத்தியிருப்பதாக டிரம்ப் சார்பில் அவர் வழக்கறிஞர் ஆலன் கார்ட்டன் விளக்கம் தெரிவித்துள்ளார்.