Home » உலகச் செய்திகள் » ஷரியத் முறைப்படி பாலியல் தொழிலாளர்களுக்கு கசையடி

ஷரியத் முறைப்படி பாலியல் தொழிலாளர்களுக்கு கசையடி

இந்தோனேசியாவின் அச்சே மாகனத்தில், பொது இடங்களில் தங்களது நெருக்கமாக இருக்கும் இணையர்களுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோருக்கும் பொது இடத்தில் பிரம்படி கொடுக்கப்பட்டது.

👤 Saravana Rajendran20 April 2018 2:40 PM GMT
ஷரியத் முறைப்படி பாலியல் தொழிலாளர்களுக்கு கசையடி
Share Post

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை மீறியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டனர். தண்டிக்கப்பட்டவர்களில் மூன்று ஆண்கள், ஐந்து பெண்கள்
இஸ்லாமியச் சட்டத்தை மீறுபவர்களைப் பொது இடங்களில் கசையடி கொடுப்பதை அச்சே-வில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆகையால் இனி கசையடி தண்டனை சிறையில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் புது விதிமுறை எப்பொழுது அமலாக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதனால் இம்முறையும் பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.