வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக இன்று பல்கலைக்கழகங்கள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (25) புதன்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒருநாள் பணிப்புறக்கணிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 மற்றும் 02ஆம் திகதிகளில் அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் கூடிய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





