Home » உலகச் செய்திகள் » ஏவுகணைச் சோதனையில் வெற்றி பெற்றது சீனா

ஏவுகணைச் சோதனையில் வெற்றி பெற்றது சீனா

சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.

👤 Sivasankaran30 Jan 2019 5:35 PM GMT
ஏவுகணைச் சோதனையில் வெற்றி பெற்றது சீனா
Share Post

சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. டி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.

3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.