கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றில் மார்ச் 5 ஆம் திகதி பரிசீலனைக்கு
அன்றைய தினம் மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது.
அன்றைய தினம் மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் பி. அபேகோன் ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, குறித்த மனு 25-11-2026 அன்று உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட சந்தரப்பத்தில், மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டது.





