அதானியின் கோத்தா மின் நிலையத்தில் ஒரு அலகு 25 நாட்களுக்கு நிறுத்தம்
இந்த பராமரிப்புப் பணிகளுக்கு வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அதானி பவர் நிறுவனத்தின் கோத்தா நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்தி அலகுகளில் ஒன்று, திட்டமிட்ட பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 25 முதல் 25 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது. இதனால், வங்கதேசத்துக்கான மின்சார விநியோகம் பாதியாகக் குறையும்.\
வங்கதேசத்தில் மின்சார இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில், இந்த விநியோகக் குறைப்பு அந்நாட்டின் மின்சார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டு மின் தட்டுப்பாடு, பணவீக்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆடைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் பதற்றம் ஆகியவற்றால் வங்கதேசம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையே, ஷேக் ஹசீனா டிசம்பர் 16ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதும் அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
இந்த பராமரிப்புப் பணிகளுக்கு வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது வழக்கமான பராமரிப்புப் பணியே தவிர, முந்தைய தொழில்நுட்பக் கோளாறுகளுடனோ அல்லது அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுடனோ தொடர்புடையதல்ல. இருப்பினும், மின் விநியோகம் பாதியாகக் குறைவது வங்கதேசத்தின் எரிசக்தி நெருக்கடிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.





