டிசம்பர் 11இல் சாமர சம்பத்துக்கு எதிரான சீராய்வு மனுமீதான விசாரணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் (சட்டப் பிரிவு) உதவிப் பணிப்பாளர் அனூஷா சம்பந்தப்பெருமவும், சாமர சம்பத் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
மாணிக்ககல் வர்த்தகரிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான உத்தரவு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கிய பிணை உத்தரவை சவாலுக்குட்படுத்தி, குறித்த பிணை உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்தச் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் (சட்டப் பிரிவு) உதவிப் பணிப்பாளர் அனூஷா சம்பந்தப்பெருமவும், சாமர சம்பத் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட வியடங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இம்மனு தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், டிசம்பர் 2 ஆம் திகதி முன்னர் பிரதிவாதி தரப்பு ஆட்சேபனைகள் மற்றும் முறைப்பாட்டாளர் தரப்பு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.





