Home » உலகச் செய்திகள் » கடும் பனிப்பொழிவையும் கொண்டாடும் கனடா மக்கள்

கடும் பனிப்பொழிவையும் கொண்டாடும் கனடா மக்கள்

கடுமையான பனிப்பொழிவு காரணமாக எட்மன்டன், ஒட்டாவா போன்ற பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகின்றது.

👤 Sivasankaran19 Feb 2019 4:16 PM GMT
கடும் பனிப்பொழிவையும் கொண்டாடும் கனடா மக்கள்
Share Post

கனடா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது.

குறிப்பாக கனடாவின் பல பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. அங்கு கடும் குளிருடனான காலநிலை நிலவி வருவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையில் குறிப்பிட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக எட்மன்டன், ஒட்டாவா போன்ற பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகின்றது.

கடுமையான பனிப்பொழிவு கனடா மக்களை வாட்டி வதைத்தாலும், பனிக்கட்டிகள் மற்றும் பனிப்படலம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் தங்கள் விடுமுறைகளைக் கொண்டாடி வருகின்றனர்.