இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்க மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் இந்தியா பயணம்
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நேற்று வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
2023–2025 காலப்பகுதியில் இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த இலங்கை, தற்போது முன்னாள் தலைவர் என்ற ரீதியிலும், சங்கத்தின் முத்தரப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





