Breaking News
மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக துசார இந்துனில் பெர்னாண்டோ நியமனம்
ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது வெற்றிடமாகவுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார் வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.





