யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மேலதிக சாட்சி விசாரணை டிசம்பர் 3 ஆம் திகதி
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு 26-11-2026 அன்று அழைக்கப்பட்ட போதே இந்த இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முறைகேடாக சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பில் பணச் சுத்திகரிப்ப தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு 26-11-2026 அன்று அழைக்கப்பட்ட போதே இந்த இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்போது வழக்கு விசாரணைக்காக பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை நேற்யை தினம் பிற்பகல் ஆரம்பமானதுடன், இதன்போது 85 ஆம் இலக்க சாட்சியாளர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அத்துடன், 9, 38 மற்றும் 85 ஆம் இலக்க சாட்சியாளர்களை அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்ததன் ஊடாக பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





