Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் விவகாரம் - சமரசத்திற்கு அழைக்கிறார் தெரேசா மே

பிரெக்ஸிற் விவகாரம் - சமரசத்திற்கு அழைக்கிறார் தெரேசா மே

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரம் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.

👤 Sivasankaran17 March 2019 5:20 PM GMT
பிரெக்ஸிற் விவகாரம் - சமரசத்திற்கு அழைக்கிறார் தெரேசா மே
Share Post

பிரெக்ஸிற் உடன்படிக்கை இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது. இந்நிலையில் முறையான சமரசம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.

ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் தோல்வி என்பது, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை கைவிடுவோம் என்பதல்ல என்று பிரதமர் மே தெரிவித்துள்ளதாக சன்டே டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 29 இல் பிரெக்ஸிற் இடம்பெறும் என தெரிவித்துள்ள நிலையில் தோல்வியடைந்துள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரம் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.